கிழக்கு மாகாணசபைப்பிரச்சனை சம்மந்தமாக நாளை கண்டியில் ஜனாதிபதி சந்திப்பு


(ரீ.கே.றஹ்மத்துல்லா)

ண்மைக்காலமாக கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் இஸ்தம்பித நிலையில் இருந்து வருவதனால் அதனை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கண்டியில் நாளை மாலை (13) சனிக்கிழமை கிழக்கு மாகாண சபையின் அமைச்சர்களையும், ஆழும் கட்சி உறுப்பினர்களையும் ஜனாதிபதி நேரில் சந்தித்துப் பேசவுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் உறுப்பினனொருவர் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஆழுமை அற்றவராக செயற்பட்டு வருவதும், அளவு கடந்த ஆழுனரின் தலையீடுகள் போன்ற காரணங்களை தெரிவித்து ஆழும் கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்கள் கபை நடவடிக்கைகளை பகிஸ்கரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலபரம் தொடர்பில் சென்ற மாதம் கொழும்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றி அளிக்காததனையிட்டே தற்போது ஜனாதிபதி மற்றும் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசுவதற்கு இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :