ஜிம்பாப்வே தொடரில் தோனி இடம்பெறவில்லை கெப்டன் கோஹ்லி


மும்பை: ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் தோனி இடம்பெறவில்லை. கேப்டனாக கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். சீனியர் வீரர் காம்பிருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

முத்தரப்பு தொடருக்குப் பின், ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி, ஐந்து ஒரு நாள் போட்டி கொண்ட (ஜூலை 24- ஆக., 3) தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகள் ஹராரேயிலும், கடைசி இரு போட்டிகள் புலவாயோவில் நடக்கும்.

இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில், தொடையின் பின் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, கேப்டன் தோனி இடம் பெறவில்லை. தவிர, இஷாந்த் சர்மா, அஷ்வின், உமேஷ், புவனேஷ்வர் ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியை கோஹ்லி வழிநடத்துவார். தவிர, "சீனியர்' வீரர் காம்பிருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் புஜாரா இடம்பெற்றுள்ளார். தவிர, ஜம்மு காஷ்மீர் வீரரான பர்வேஸ் ரசூல், மோகித் சர்மா போன்ற இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அணி விவரம்:

கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், புஜாரா, ரெய்னா, ராயுடு, ரகானே, ஜடேஜா, அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல், முகமது ஷமி, வினய் குமார், உன்த்கத், மோகித் சர்மா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :