ஜா-எல, கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனுடன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (01) அதிகாலை 4 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்தின் போது 2 மற்றும் 5 வயதான சிறுவர்கள் இருவர் வாகன சாரதி மற்றும் பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி காயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கணவன் மற்றும் அவரது பிள்ளைகள் இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 comments :
Post a Comment