வெப்சைட்டில் வெளியான பல்கலைகழக மாணவியின் படங்களால் பரபரப்பு! (படங்கள் இணைப்பு)



சீனாவில் உள்ளது ரென்மின் பல்கலைக்கழகம். இசை, கலைகள் கற்றுத் தரும் பல்கலை இது. இங்கு கடந்த வாரம் பட்டமளிப்பு விழா நடந்தது. ஆண்டுதோறும் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். இந்த ஆண்டு பல்கலை என்ன நினைத்ததோ தெரியவில்லை. பட்டமளிப்புக்கு பிறகு, தனது வெப்சைட்டின் முதல் பக்கத்தில், காங் காங் என்ற மாணவியின் படத்தை விதவிதமான போஸ்களில் வெளியிட்டது. அந்த படத்தை பார்த்து ஏராளமானோர் கண்டமேனிக்கு விளாசி தள்ளி உள்ளனர்.

புதிதாக மாணவர் சேர்க்கைக்கு பல்கலை நடத்திய விளம்பர உத்தி இது என்கின்றனர் பலர். எதற்கு ஒரே ஒரு மாணவியின் படத்தை வெப்சைட்டில் வெளியிட வேண்டும். 

அவர் என்ன அவ்வளவு ஸ்பெஷல் என்று பலர் கேட்கின்றனர். எங்கள் பல்கலை மாணவிகள் எவ்வளவு அழகு பாருங்கள் என்று பல்கலை சொல்ல வருகிறதா? இந்த பல்கலை அழகிகளை தயாரிக்கிறதா அல்லது கலைஞர்களை உருவாக்குகிறதா? என்று பலர் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளனர்.

சீனாவில் உள்ள பல பெண்களுடன் ஒப்பிடும் போது, வெப்சைட்டில் காணப்படும் மாணவி அவ்வளவு ஒன்றும் அழகில்லை என்கின்றனர் பலர்.
எனினும், மாணவிக்கு ஆதரவு தெரிவித்தும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். பல்கலை.யின் தேவதை என்று பலர் அந்த மாணவியை புகழ்ந்து தள்ளி உள்ளனர். சர்ச்சை பெரிதானதால் உடனடியாக பல்கலை தனது வெப்சைட்டை மூடிவிட்டது.TCNN
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :