பீகாரின் புத்த கயாவில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததற்கு கண்டனம் தெரிவித்து தலைநகர் கொழும்பில் பௌத்த பிக்குகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தலைநகர் கொழும்பில் பொதுபல சேனாவும், ராவன பலாய என்ற அமைப்பும் இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. கொழும்பில் இந்திய தூதரகம் அருகே ஒன்று திரண்ட பௌத்த பிக்குகள், இந்தியாவில் உள்ள பவுத்த மத கலாசார அடையாளங்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் வியட்நாமைச் சேர்ந்த சில பிக்குகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது உரையாற்றிய பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர்,
புத்தகாயாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா அனைத்து உலகவாழ் பௌத்தர்களிடமும் மன்னிப்புக் கோர வேண்டும். தாக்குதல் குறித்து முன்கூட்டிய இந்திய புலனாய்வுத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தபோதும் விகாரையை பாதுகாக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தினார்.

0 comments :
Post a Comment