மாடறுப்பதை தடை செய்வதாக ஜனாதிபதி உறுதியளிக்கவில்லை: பௌசி

றைச்சிக்காக மாடறுப்பதை தடை செய்வதாக ஜனாதிபதி உறுதியளிக்கவில்லை என சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார்.

சிங்கள ராவய என்னும் கடும்போக்குவாத அமைப்பிற்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள ராவய அமைப்பின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்த போதிலும் தடை செய்வதாக அறிவிக்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்குள் இறைச்சிக்காக மாடுகளை வெட்டும் நடவடிக்கை ரத்து செய்யப்படும் என ஜனாதிபதி உறுதியளித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :