மூன்று மாகாண சபைகளுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான திகதி அறிவிப்பு.

லங்கையில் மூன்று மாகாண சபைகளுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான திகதியை தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமாகாணம், மத்தியமாகாணம், வடமேல் மாகாணம் ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான வேட்பு மனுக்கள் இம்மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இந்த மூன்று மாகாணங்களில் குறிப்பாக வட மாகாணத்திற்கான தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்று பலத்த ஐயப்பாடு நிலவிய சூழலிலேயே வேட்பு மனுக்களை ஏற்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் காணி, பொலிஸ் அதிகாரங்களை இல்லாமல் செய்துவிட்டே அந்த சபைக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தெற்கில் உள்ள சிங்கள தீவிர அரசியல் சக்திகள் கோரி வந்திருந்தன.

இந்தக் கோரிக்கையை ஏற்று அவ்வாறு அதிகாரங்களை தேர்தலுக்கு முன்னர் இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது,

இருப்பினும் வடமாகாண சபைத் தேர்தலானது, மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் குறைக்கப்படாத நிலையிலேயே நடத்தப்பட வேண்டும் என்று இந்தியாவும் குரல் கொடுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. (BBC)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :