புத்தளம் நகர அபிவிருத்திக்கு 126 கோடி நகர பிதா பாயிஸிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

கிந்த சிந்தனையின் அடிப்படையில் வடமேல் மாகாணத்தின் குளியாபிட்டி நகரில் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் “தெயட கிருல ” (தேசத்தின் மகுடம்) கண்காட்சியை முன்னிட்டு அரசாங்கத்தின், புத்தளம் தொகுதி பிரதான அமைப்பாளரும் புத்தளம் நகர முதல்வருமான கே ஏ பாயிஸ் அவர்களுக்கு 126 கோடிரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்ட ஒதுக்கீடாக உள்ளக அபிவிருத்திகளுக்கென புத்தளம், வண்ணாத்திவில்லு, முந்தல் கல்பிட்டி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 108 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி அபிவிருத்தி என்றவகையில் 1000 பாடசாலைகளுக்குள் உள் வாங்கப்பட்டுள்ள சாகிராக் கல்லூரி, பாத்திமா கல்லூரி, ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி, ஆனந்தக் கல்லூரி என்பனவற்றுக்கு ஆய்வுகூட கட்டிடத்துக்கென ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் 4 கோடி ரூபாவும், சாகிரா கல்லூரியில் ஆரம்பிக்கப்படவுள்ள க. பொ. த. உயர்தர தொழில்நுட்ப ஆய்வுகூட கட்டிடத்துக்காக 2 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நகர பிதாவின் வேண்டுகோளின் பேரில் சாகிரா கல்லூரிக்கென ஒதுக்கப்படும் நிதி விபரங்களை, கல்வி அமைச்சர் இன்று சாகிராவில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்ததுடன் ஏனைய ஒதுக்கீடுகள் பற்றிய விபரங்களை நகரசபையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :