ரமழான் மாதத்தில் இலத்திரனியல் ஊடகங்கள் அதான் ஒலி பரப்பினை சரியான நேரத்திலே மேற்கொள்ள வேண்டும். இலத்திரனியல் ஊடகங்களுக்கிடையிலான போட்டியினால் சிறிது நேரமெனினும் முன்னதாகவோ பின்னதாகவோ ஒலிபரப்பக் கூடாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் இலத்திரனியல் ஊடகங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளார்.
முஸ்லிம்கள் நோன்பு நோற்கும் விடயத்திலும் நோன்பினைத் திறக்கும் விடயத்திலும் அதான் ஒலிபரப்பப்படும் நேரத்தையே கணிப்பிடுகிறார்கள். எனவே ஊடகங்கள் சரியான நேரத்தில் அதானை ஒலிபரப்ப வேண்டும் என அவர் தனது கடிதத்தில் வேண்டியுள்ளார்.

0 comments :
Post a Comment