ஆயுள் தண்டனை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு.


70 வயதைத் தாண்டிய 485 கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

இதற்கான அட்டவணை யொன்று தயாரிக்கப்பட்டு ள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.இவர்கள் ஆயுட்தண்டனை, மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு 12 வருடங் களளுக்கும் மேல் சிறைவாசம் அனுபவிப் பவர்கள் ஆவர்.

இந்த அட்டவணையை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலர், நீதி அமைச்சின் செயலரிடம் கையளிப்பார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைகளின் பேரில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இதனைத் தயாரித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட 334 கைதிகள் இருப்பதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார்.

உலக நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் கணிசமான அளவு குறைந்திருப்பதாக இத்தாலியைச் சேர்ந்த அரச சார்பற்ற அமைப்பொன்று நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

2011ம் ஆண்டில் உலகில் உள்ள சகல சிறைச்சாலைகளிலும் மரண தண்டனை பெற்ற 5004கைதிகள் இருந்தார்கள். 

இது 2012ல் 3967க குறைந்துள்ளது.  இவ்விரு வருடங்களில் மரண தண்டனையை தடை செய்யும் சட்டம் 155 நாடுகளில் இருந்து தற்போது 158 நாடுகளாக உயர்ந்துள்ளது.

சீனாவில் மாத்திரம் கடந்த ஆண்டில் மரண தண்டனைப் பெற்ற கைதிகளின் எண்ணிக்கை4000ல் இருந்து3000ஆக வீழ்ச்சி அடைந்தது. சீனாவில் 2007ம் ஆண்டு முதல் மரண தண்டனை வழங்குதல்10 சதவீதம் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது.

ஈரானில் 2012ம் ஆண்டில் 580 பேர் மீதான மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

இதேயாண்டில் ஈராக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதாவது 129ஆக அதிகரிக்கப்பட்டது. இன்று உலகில் 40 நாடுகளை எடுத்துக் கொண்டால் அவற்றில் 33 நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில் இருந்து வருகிறது.

லிபரல் ஜனநாயக நாடுகளில் 2011ம் ஆண்டில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவ்வாண்டில் அமெரிக்காவிலும், தாய்வானிலும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. 

ஜப்பான், பொட்ஸ்வானா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்படுகின்ற போதிலும் பல்லாண்டு கால இடைவெளியின் பின்னர் மரண தண்டனை அந்நாடுகளில் இடைநிறுத்தப்பட்டன.

இவ்வாண்டின் இந்தோனேஷியாவில் 5 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் முதலாவது மரண தண்டனை விதிக்கப்பட்டது. நாகரிகம் வலுவடைந்து வரும் நாடுகளில் மதுபோதை,போதைவஸ்துக்கள் கடத்தல், கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதனால் மரண தண்டனை விதிப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :