பொது பலசேனாவுடன் என்னை சிண்டு முடியத் தேவையில்லை - கல்முனை சுபத்ராராமய விகாராதிபதியும்
=========================
நான் பெளத்த சமயத்தைச் சேர்ந்தவன். பெளத்த சமயத்தைப் பேண வேண்டிய தேவை எனக்குள்ளது.
அதற்காக ஏனைய சமயங்களை தூசிக்க வேண்டிய தேவை எனக்கு மட்டுமல்ல யாருக்குமில்லை.
அவரவர் சமயம் அவரவர்க்கு பெரியது. அதில் தலையிட வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.
என கல்முனை சுபத்ராராமய விகாராதிபதியும் சமாதானத்திற்கான சமயங்களின் பேரவையின் உப தலைவருமான வண. ரண்முத்துகல சங்கரத்ன தேரர் சாய்ந்தமருதில் நடைபெற்ற பேரவையின் உயர்பீடக் கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.
சமாதானத்திற்கான சமயங்களின் பேரவையின் தலைவர் டாக்டர் அல்-ஹாஜ் எம்.ஐ எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இவ் உயர்பீடக் கூட்டத்தில் வண. ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தொடர்ந்து பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாடு ஒரு இனத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. இங்கு பிறந்த அனைவருக்கும் இந்நாடு சொந்தமானது. ஆனதால் யாரும் இனவாதம், மதவாதம் பேசி நாட்டைப் பிரித்து சமாதான சூழலைக் குழப்ப முன் வரக்கூடாது. ஹலால் விடயம் முஸ்லிம்களைச் சார்ந்தது. அதைப் பற்றி நானோ தமிழர்களோ அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இது எமக்கு வேண்டாம். அதற்காக அது சரி, இது பிழை என்று கூற நான் முற்படவில்லை. அந்த தேவையுமில்லை.
உயிர்களைக் கொல்ல வேண்டாம் என சமயங்கள் கூறுகின்றன. ஆகவே மாட்டை அறு என நான் கூறமாட்டேன். மாட்டை அறுப்பதோ உண்பதோ அது அவர்களது சமாச்சாரம். அதில் நான் தலையிடவில்லை அந்த தேவையும் எனக்கு இல்லை.
பல்லின சமூகத்தின் மத்தியில் வாழும் நாம் சில சில விட்டுக் கொடுப்புகளுடனும், சகிப்புத் தன்மையுடனும் வாழக் கற்றுக் கொள்ளவேண்டும்.
நான் பெளத்த மத துறவி. அந்த மதத்தைப் பின் பற்ற வேண்டும். அதற்காக ஏனைய மதங்களை புண்படுத்த வேண்டிய அவசியம் யாருக்குமில்லை. பொது பலசேனா பெளத்தத்தைப் பாதுகாக்கப் புறப்பட்டவர்கள் எனக் கூறுகின்றனர். அதில் நன்மை, தீமை இருக்கும்.
எனவே, பொது பலசேனாவுடன் என்னை சிண்டு முடியத் தேவையில்லை. நான் எல்லா சமூகத்தவர்களுடனும் எல்லா சமயத்தவர்களுடனும் சமாதானமாக வாழ விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

.jpg)
0 comments :
Post a Comment