கணவர் சூர்யாக்கு கண்பட்டுவிடும் என்று திருஷ்டி சுத்தி போட்டார் ஜோதிகா

சூர்யா இதுவரை 25 படங்களுக்கு மேலாக நடித்து விட்டார். ஆனால் அவரது தந்தை சிவகுமார் ஒரு படத்தில்கூட அவர் நடித்ததைப் பார்த்துவிட்டு மனதார பாராட்டியதில்லையாம். நன்றாக இருக்கிறது என்று பொதுவாக சொல்வாராம். 

ஆனால், சிங்கம்-2 படத்தைப் பார்த்து நெகிழ்ந்து விட்டாராம் சிவகுமார். முதன்முறையாக மகன் சூர்யாவுக்கு எஸ.எம்.எஸில் பாராட்டு மடல் அனுப்பினாராம். எத்தனை பேர் பாராட்டினாலும் பெற்ற தந்தையின் பாராட்டு உயர்வானது அல்லவா. அதிலிருந்து சூர்யா இன்னும் பரபரவென்று உற்சாகத்தில் இருக்கிறாராம். 

இப்படி அப்பாவின் பாராட்டு ஒருபுறமிருக்க, சூர்யாவின் துணைவியார் ஜோதிகாவும், இந்த படத்தைப்பற்றி பலரும் சொல்வதைக்கேட்டு, தானும் குழந்தைகளுடன் தியேட்டருக்கு சென்று படத்தைப் பார்த்தாராம். 

அதையடுத்து வீட்டுக்கு வந்தவர், சூர்யாவுக்கு திருஷ்டி சுத்தி போட்டு விட்டாராம். அந்த அளவுக்கு உங்களது நடிப்பு மட்டுமின்றி ​பொலிஸ் சீருடையில் என் கண்ணே பட்டிருக்கும்,. அத்தனை அழகு என்று சூர்யாவை கொண்டாடினாராம். 

இதனால் எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்திற்கு கிடைத்த பாராட்டு மழையில் பெருத்த சந்தோசத்தில் இருக்கிறார் சூர்யா. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :