சிறுவயதினர் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை தடுக்கும்வகையில் அமெரிக்க புலனாய்வுத்துறை சென்ற வார இறுதியில் நாடு முழுவதும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது.
சமூக ஊடக தளங்களில் இது போன்ற விபச்சாரங்கள் நடைபெறுவதும், நெடுந்தொலைவு பயணங்களில் டிரக்குகள் நிறுத்தப்படும் இடங்களில் நடைபெறும் இத்தகைய காரியங்களும் சோதனையாளர்களால் கண்காணிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மூன்று தினங்களாக 230 சட்ட அமலாக்கப்பிரிவினர் 76 நகரங்களில் நடத்திய இந்த சோதனைகளில், 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 105 இள வயதினர் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 13 முதல் 17வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.
குழந்தை விபச்சாரம் அமெரிக்கா முழுவதும் உள்ள ஒரு தொடர் அச்சுறுத்தலாகும். இத்தகைய குற்றங்கள் எங்கு வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கான நினைவூட்டலாகவே புலனாய்வுத்துறையின் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய குற்றங்களினால் லாபமடைபவர்களைத் தடுத்து நிறுத்துவதிலும், இந்தத் தொடர் நிகழ்ச்சியினை முடிவுக்கு கொண்டு வருவதிலும் அமெரிக்க புலனாய்வுத்துறை உறுதியாக உள்ளது என்று இந்த அமைப்பின் துணை இயக்குனர் ரோன் ஹோஸ்கோ தெரிவித்தார்.
கடந்த 2003ம் ஆண்டிலிருந்து இதுவரை 2700பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பாராட்டுகள்,சலுகைகள் அல்லது பணம்பண்ண வேண்டும் என்ற எண்ணம் இளவயது பெண்களை இதில் சிக்க வைத்துவிடுகின்றது. இதனால், போதை மருந்துகள், சித்திரவதை, உடல் ரீதியான முறைகேடுகள் போன்றவற்றை பின்னர் அவர்கள் அனுபவிக்க நேரிடுகின்றது என்று ஹோஸ்கோ கூறியுள்ளார்.

0 comments :
Post a Comment