12 வயதுச் சிறுமியை கடித்திச் சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 24 வயதான இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட சிறுமி கொஸ்வத்த - மீகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கடந்த 8ஆம் திகதி கடத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிறுமி குறித்த இளைஞனுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவருடன் சிறுமி விரும்பிச் சென்றுள்ளதாகவும் தாயார் அறிந்து கொண்டுள்ளார்.
இதன் பின்னதாக சிறுமியின் தாய் தனது மகள் காணாமற்போனமை தொடர்பில் மாரவில பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன் பின்னர் சிறுமி கடந்த 28ஆம் திகதி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.
தான் தனது காதலனுடன் விரும்பிச் சென்றதாகவும் பொலன்நறுவை - மன்னம்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் கணவன், மனைவியாக கடந்த நாட்களாக வாழ்ந்ததாகவும் சிறுமி தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதை அறிந்த தயார் மாரவில பொலிஸில் முறைப்பாடு செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தாயாரின் முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் சிறுமி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 comments :
Post a Comment