நுஜா ஊடக அமைப்பின் இப்தார் நிகழ்வு,


-எம்.பைஷல்இஸ்மாயில்-
தேசியஐக்கியஊடகவியலாளர்ஒன்றியம்(நுஜா) ஏற்பாடு செய்த மார்க்க சொற்பொழிவும், இப்தார் நிகழ்வும் இன்று 2013.07.28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்தில் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக இராணுவத்தின் அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி கேணல் ஹரின் வீரசிங்க, உதவி பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளர் யூ.எம்.வாஹிட், ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல்.மன்சூர், பிரபல தொழில் அதிபரும் மு.காவின் அக்கரைப்பற்று மத்திய குழுவின் உப தலைவர் ஏ.எல்.மர்ஜூன், அட்டாளைச்சேனை அனைத்து விளையாட்டுக் கழக சம்மேளத் தலைவர் ஹம்ஸா சனூஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இங்கு நுஜா அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸினால் இப்தார் நிகழ்வு ஏற்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறியதுடன் கடந்த ஒன்பது வருடகாலமாக நுஜா ஊடக அமைப்பு ஆற்றிவருகின்ற பணிகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறினார்.

அதன் பின்னர் மௌலவி அப்துல் ஹபீழ் (ஹாசீமி) மார்க்க சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது. இதில் நோன்பின் முக்கியத்துவம் மற்றும் ரமழான் மாதத்தில் நாம் மேற்கொள்ளவேண்டிய வணக்க வழிபாடுகள் பற்றிய தெழிவான விளக்கத்தினையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் நுஜா ஊடக அமைப்பின் அங்கத்தவர்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுககர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வினை நுஜா ஊடக அமைப்பு மிகச் சிறப்பான முறையில் ஒழுங்கு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.



 









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :