-எம்.பைஷல் இஸ்மாயில்-
ஊடகவியலாளர் முர்தளாவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் மிக வன்மையாக கண்டித்துள்ளது.
இது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவர் ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் தெரிவித்த கண்டன அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊடகவியலாளர்கள் தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கப்பபால் நின்று சமூகத்திற்காக சேவை செய்கின்ற வேளையில் தனிப்பட்ட நபர்களின் விருப்பங்களுக்கு செவிசாய்க்க முடியாது. நடுநிலையான, உண்மைத் தன்மையான செய்திகளை வெளிப்படுத்தும் போது அவர்கள் தாக்கப்படுவதும், அவர்களது உடமைகள் சேதமாக்கப்படுவதும் இது ஒரு கண்டிக்கத்தக்க செயலாகவே நாம் கருதுகின்றோம்.
குறிப்பாக குறித்த ஊடகவியலாளரினால் ஊடகமொன்றிற்கு எழுதப்பட்ட செய்தியினை தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட சூத்திரதாரிகளை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதற்காக அக்கரைப்பற்று பொலிஸார் மிக தீவிரமாக செயற்படவேண்டும்.
ஊடகத்துறையைப் பொறுத்தவரையில் இந்த செய்தியில் ஏதாவது பிழைகள் காணப்படுவதாக இருந்தால் செய்தியை வெளியிட்ட உரிய ஊடக நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட செய்திக்கான மறுப்பறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்க முடியும். ஆனால் கீழ்த்தரமாக சட்டத்தை கையிலெடுத்து அடாவடிகளில் குறித்த நபரோ அல்லது அமைப்போ ஈடுபடுவது அநாகரீகமான செயலாகும்.
எனவே, இந்த காடைத்தனமான செயலை கண்டிப்பதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது எனவும் ஊடகவியலாளர் முர்தளாவின் வீட்டின் மீது இனந்தெரியாதேரினால் கடந்த வியாழக்கிழமை (25) இரவு 10.45 மணியளல் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைத்யடுத்து. அக்கரைப்பற்று பொலிஸாருக்கும், 119 இலக்கத்துக்கு தெரிவித்தும் கூட பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தர அதிகாலை 2.00 மணியளவில் வந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்தமையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment