இலங்கையில் 51% அரசியல் வாதிகளில் ஊழல் செய்கின்றனர்!! ஆய்வில் தகவல்


லக சனத்தொகையில் நான்குபேரில் ஒருவர் தங்களுடைய தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக இலஞ்சம் கொடுப்பதாக டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் அறிவித்துள்ளது.
அண்மையில் நடத்திய புதிய ஆய்வின் போதே மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகிலுள்ள நாடுகளில் 107 நாடுகளைச்சேர்ந்த ஒரு இலட்சத்து 14 ஆயிரம் பேரிடம் மேற்கொண்ட ஆய்வுகளின் போதே மேற்கண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் 86 வீதமான அரசியல் வாதிகளும் இலங்கையில் 51 வீதமான அரசியல் வாதிகளும் ஊழலில் ஈடுபடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
கடந்தவருடம் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கியமையும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் 62 வீதமும், இலங்கையில் 43 வீதமும் இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் இலஞ்ச மற்றும் ஊழல் அதிகரித்துள்ளது என்பது இந்த ஆய்வு சான்று பகருகின்றது என்றும் டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நெசனல் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :