வேகக்கட்டுப்பாட்டை இளந்த மோட்டார் சைக்கிள் சுவரில் மோதி 17 வயது இளம் பெண் பலி

வென்னப்புவ பொலிஸ் பிரிவின் போலவத்தை, பண்டிருப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில்
17 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த இளம்பெண், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது, அருகில் இருந்த சுவரொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கடந்த 8ம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்தநிலையில் குறித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (10) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பலியானவர் கடுகேந்த தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :