மக்களின் பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்வதற்காக அரசாங்கம் 13வது திருத்தம் மற்றும் தெரிவுக்குழு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சுயாதீன பொலிஸ், சுயாதீன தேர்தல், சுயாதீன நீதித்துறை அமைத்து மாகாண சபை அதிகாரங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவே மக்களால் பெரும்பான்மை வழங்கப்பட்டுள்ளது. அது குறித்துதான் கதைக்க வேண்டும். அதன்படிதான் செயற்பட வேண்டும். ஆனால் அரசாங்கம் அதனை மறந்துள்ளது. அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டால் அதன்படியே எமது எதிர்ப்பையும் தெரிவிப்போம்.
17வது திருத்தச் சட்டத்தில் சுயாதீன பொலிஸ் குழு, நீதித்துறை போன்ற அம்சங்கள் உள்ளன. அதன்மூலம் ஊழல் அற்ற நிர்வாகத்தை கொண்டு செல்ல முடியும்.
இன்று நாட்டு மக்களின் பிரச்சினை இதுதான். ஆனால் அரசாங்கம் இவை பற்றி பேசாமல் தங்களுக்குள் உள்ள 13வது திருத்தம் குறித்து பேச தெரிவுக்குழு அமைப்பதும் இந்தியாவிற்கு அமைச்சர் பசிலை அனுப்புவதுமாக இருந்தால் மக்களை மறக்கும் அரசாங்கத்துடன் எமக்கு என்ன பேச்சு? 13ம் திருத்தத்தை பற்றி பேச முதலில் பசில் ராஜபக்ஷவை இந்தியா அனுப்பியது இந்த அரசாங்கம்.
அதன் பின்னர் எதற்கு எங்களை அழைக்கிறது. 13வது திருத்தம் குறித்த தெரிவுக்குழு அரசாங்கத்தின் சரியான பங்களிப்பு இன்றியே அமைக்கப்பட்டுள்ளது. 17வது திருத்தம் குறித்து கதைக்க தயார் என்றால் நாமும் கதைக்கத் தயார்.
இவ்வாறு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

0 comments :
Post a Comment