முஸ்லிம் வர்த்தகரின் கொலை தொடர்பில் வாஸ் குணவர்தனவின் மகன் கைது


ம்பலப்பிட்டிய, கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகரின் கொலை தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனான ரவீந்து குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலையுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில் பல முக்கிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்த பிரதிப் பொலிஸ் அத்தியட்சர் சானி அதனடிப்படையில் வாஸ் குணவர்தனவின் மகனான ரவிந்துவுக்கு இக்கொலையுடன் மிக நெருங்கிய தொடர்பிருப்பதாக சுட்டிக்காட்டியதுடன் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடுவெல பிரதேசத்தில் வீடு ஒன்றில் ரவீந்து குணவர்தன இருந்த போதே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :