மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்கள் செல்வதற்க்குத் தடை -டிலான்


திர்வரும் ஒகஸ்ட் 1ம் திகதி தொடக்கம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்புவது தடை செய்யப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

எனினும் வெளிநாடு செல்ல விரும்பும் பெண்கள் பயிற்றப்பட்டு ´வீட்டு உதவியாளர்களாக´ மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு அனுப்பப்படும் பெண்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட்டு தெளிவூட்டப்பட்டு அனுப்பப்படுவதோடு அவர்களின் பெயர்களும் மாற்றப்படும் என டிலான் பெரேரா குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (10) பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் டிலான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெளிநாடு செல்லும் இலங்கை பணிப்பெண்கள் அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்தும் அதுபற்றி வெளியாகும் செய்தி குறித்தும் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியபோது, அவை அனைத்தும் பொய்யான தகவல் என அமைச்சர் டிலான் பெரேரா பதிலளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :