-எம்.பைஷல் இஸ்மாயில்-
அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபிக் கல்லூரிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீட் இன்று (29) மாலை விஜயத்தினை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கல்லூரியை பார்வையிட்டனர்.
கல்லூரி அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் முதல்வர் நஜீப் ஏ.மஜீட் கல்லூரின் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டு தன்னாலான உதவிகளை செய்து தருவதாக இக்கலந்துரையாடலின் போது முதலமைச்சர் கூறினார்.






0 comments :
Post a Comment