தென்னிலங்கை முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தப்படுவதற்க்கு SLMC தான் காரணம்-முபாறக் மஜீட்

ன்று தென்னிலங்கை முஸ்லிம்கள் சிங்கள இனவாதத்தின் கொடுமைகளுக்கு முகம் கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வடக்கு கிழக்ககிலிருந்து தென்னிலங்கை நாம் கொண்டு சென்றமையும் பிரதான காரணம் என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிபபிட்டார்.

கொழும்பு வை எம் எம் ஏயில் நடைபெற்ற முஸ்லிம் சமூகம் எதிர் நொக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராயும் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

கிழக்கு முஸ்லிம்கள் தென்னிலங்கை முஸ்லிம் தலைமைகளால் ஓரங்கட்டப்பட்டு தமது பதவிகளுக்காக கிழக்கு முஸ்லிம்களின் பலம் விற்கப்பட்டுக்கொண்டிருந்ததனால்த்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்
கிரஸ் உவாகியது. அதனை கிழக்குக்கு வெளியே தென்னிலங்கைக்கும் கொண்டு சென்ற போது இதன் மூலம் முழு முஸ்லிம்களின் உரிமைகளை பெறலாம் என நினைத்தோம்.

ஆனால் அது மிகப்பெரிய வரலாற்றுத்தவறு என்பதை கண்ணூடாக கண்டபின் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வரலாற்றுத் தவறுகளில் இருந்து பாடம் படிக்காத ஒரு சமூகம் விமோசனத்தை அடைய முடியாது. நமது தவறுகளை நாம் ஏற்கத்தயங்குவதுதான் நமது பெரும் பலவீனம்.

    தென்னிலங்கைக்கு முஸ்லிம் காங்கிரசை கொண்டு சென்றதால் எங்கே தமது வெற்றிகள் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் சிங்கள கட்சிகள் முஸ்லிம்களை இனவாத கண்ணோட்டத்துடன் பார்த்தன. அதே போல் தென்னிலங்கை முஸ்லிம் அரசியல் தலைமைகளும் தமது பதவிகளை காத்துக்கொள்வதற்காக முழு முஸ்லிம்களையும் காட்டிக்கொடுத்தார்கள்.
 
பொதுவாக சராசரி அரசியல்வாதிகள் தமது வாக்கு வங்கிக்காக எத்தகைய கொடுமைகளையும் செய்யத்துணிவார்கள். இதையே ஹெல உறுமய போன்ற இனவாதக்கட்சிகள் முஸ்லிம்களுக்கெதிராக படுமோசமான இனவாத கருத்துக்களை முன்வைக்க காரணமாகும். அத்தோடு ஜே வி பி ஏன் ஐ தே க, ஸ்ரீ சு . க என்பவையும் முஸ்லிம்கள் மீதான துவேச கருத்துக்களை வெளியிட்டன என்பதையும் மறுக்க முடியாது.

 இதற்குக் காரணம் முஸ்லிம் காங்கிரஸ் தென்னிலங்கையில் கால் பதித்ததால் எங்கே தமது வாக்குகள் சிதைந்து விடுமோ என்ற அச்சத்தில் இனத்துவேசத்தைக் கூறி சிங்கள வாக்குகளை கவர முற்பட்டார்கள்.
 
இத்தகைய அரசியல் பின்னணியின் விளைவுதான் இன்று முஸ்லிம்களை குறிப்பாக தென்னிலங்கை முஸ்லிம்களை வாட்டி வதைக்கிறது. அத்தோடு முஸ்லிம் காங்கிரசின் தலைமையும் இன்று தென்னிலங்கையை சேர்ந்ததாக உள்ளதால் அத்தலைமை கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கும் சேவை செய்ய முடியாமல் தென்னிலங்கை முஸ்லிம்களுக்கும் சேவை செய்ய முடியாமல் அனைவரையும் சமாளித்துக்கொண்டு தனது பதவியை காக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
 
இந்த நிலையிலிருந்து நாம் மாற வேண்டுமாயின் கிழக்கு மக்களுக்காக கிழக்கு தலைமையிலான எமது  முஸ்லிம் கட்சியை பலப்படுத்த கிழக்கு மாகாண முஸ்லிம்கள் முன் வர வேண்டும். அதே போல் தென்னிலங்கை முஸ்லிம்கள் முடிந்தளவு தமது அரசியலை சிங்கள தலைமைகளைக்கொண்ட கட்சிகளுடாகவே கொண்டு செல்ல வேண்டும். பதவிக்கு சோரம் போகாத ஒரு கிழக்கு தலைமையால் தென்னிலங்கை முஸ்லிம்களுக்கும் துணிச்சலாக குரல் கொடுக்க முடியும்.

ஆனால் தென்னிலங்கை முஸ்லிம் தலைமையால் கிழக்குக்கு மட்டுமல்ல தென்னிலங்கைக்கு ஆதரவாகக்கூட குரல் கொடுக்க முடியாது என்பதைத்தான் வரலாறு எமக் கற்றத்தந்துள்ளது.  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :