தன்னைக்காதலித்து திருமணம் முடிப்பதாக ஏமாற்றிய நீதிபதி, பெண் பொலிஸ் SI புகார்.

காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மீது பெண் எஸ்.ஐ. புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் உமாமகேஸ்வரி. இவரும், குன்னூர் குற்றவியல் விரைவு நீதிமன்ற நீதிபதி தங்கராஜும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மே 14ஆம் தேதி, தன்னை காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக நீதிபதி தங்கராஜ் மீது திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அமித்குமார் சிங்கிடம் உமா மகேஸ்வரி புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் பல்லடம் டி.எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 2 மாதம் கழித்து உமாமகேஸ்வரியை திருமணம் செய்துகொள்வதாக தங்கராஜ் உறுதியளித்துள்ளதாக தெரிகிறது.

இச்சூழலில், கடந்த வாரம் தங்கராஜுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து உமா மகேஸ்வரி, தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தங்கராஜ் மீது மீண்டும் ஒரு புகாரை திருப்பூர் எஸ்.பி.யிடம் அளித்தார் உமாமகேஸ்வரி.

அதன் அடிப்படையில் பல்லடம் போலீசார் இந்த புகார் தொடர்பாக விசாரித்து வந்தனர். இன்று காலை நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்த நீதிபதி தங்கராஜை விசாரணைக்காக பல்லடம் போலீசார் அழைத்து வந்து அவிநாசி பயணியர் மாளிகையில் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவம் காவல்துறை மற்றும் நீதித்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :