(எம்.பைஷல் இஸ்மாயில்)
சாய்ந்தமருது அல்-ஹிலால் வீதியில் அமைந்துள்ள தக்வா பள்ளிவாசல் மையவாடி குப்பைக்காடாக யாருமே கவனிப்பாறற்று மிக நீண்ட காலமாக காணப்படுகின்றன.
சாய்ந்தமருது பிரதேசத்தில் பழமை வாய்ந்த மையவாடிகளில் ஒன்றான தக்வா பள்ளிவாசல் மையவாடி மிக நீண்ட மாத காலமாக கவனிப்பாறற்று காட்சியளிக்கின்றது. கடந்த காலங்களில் இந்த மையவாடியை பிரதேச வாசிகள் மற்றும் மீனவர்களும் இணைந்து பொது ஸ்தாபனங்களின் உதவியோடு அவ்வப்போது துப்பரவு செய்து வந்தன.
கடந்த காலங்களில் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசலின் ஜனாஸா நலம்புரி அமைப்பின் தலைவரான வை.எம்.ஹனிபா ஆசிரியர் தலைமையில் இந்த ஜனாஸா நலன்புரி அமைப்பு ஓரளவு செயற்பட்டு இயங்கி வந்த இந்நிலையில் புதிய நிருவாகத்தினருக்கான தெரிவு இடம்பெற்று புதியவர்கள் குறிப்பிட்ட பொருப்புக்களை ஏற்றபின் ஓரிரு வாரங்கள் மிக வேகமாக செயற்பட்டு வந்த இந்நிலைமையில் இரு மாதங்கள் கடந்த பிற்பாடு இன்றய தலைமை பொருப்பெடுத்த போது செயற்பட்ட ஜனாஸா நலம்புரி அமைப்பின் அங்கத்தவர்கள் எதுவித செயற்பாடுகளும் அற்றவர்களாக காணப்படுவது என்பது மிக மனவேதனையை தரும் விடயங்களாகவே உள்ளது.
ஹனிபா ஆசிரியரியரின் தலைமைப் பொருப்பிலிருந்த உறுப்பினர்கள் ஓரளவு இறைவனுக்கு பயந்து அதற்கான பொருப்புக்களை மேற்கொண்டு வந்த போதிலும் அமைப்பினருக்கு முடியாத விடயங்களை பொதுமக்களினாலும், பொது நிறுவனங்களினாலும், ஊர் தனவந்தர்களினாலும் அமைப்புக்குரிய கடமைகளை செய்து மையவாடி துப்பரவு செய்தல் மற்றும் மையவாடிக்கு தேவையானவைகளை எல்லாம் செய்தும் வந்தனர். ஆனால் தற்போதுள்ள அமைப்பினர் அவ்வாறில்லாமல் தானும் செய்வதில்லை, செய்பவர்களை செய்ய விட்டதுமில்லை, வேறு யாரின் எதவிகளையும் கோரிக்கொள்வதுமில்லை.
இருந்த போதிலும் மையவாடியின் அவல நிலையை பார்த்துக் கொண்டிருக்க முடியாத சில நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவவரும் போது மாத்திரம் இந்த சாய்ந்தமருது ஜனாஸா நலம்புரி அமைப்பினர் எப்படியோ அவ்விடத்திற்கு வருகை தந்து தங்களின் வேண்டுகோளின் பெயரில்தான் இந்த வேலை நடைபெருகின்றது என்று மார்பு தட்டிக் கொண்டு பேசித் திரியும் நிலைமையை மட்டும் தான் தற்போதுள்ள இந்த அமைப்பின் தலைமை மற்றும் உறுப்பினர்கள் செய்யும் வேலையாக காணப்படுகின்றன.
இவை அவ்வாறிருக்க, இந்த இடத்தில் ஒரு விடயத்தை கட்டாயம் சுட்டிக்காட்டியே ஆகவேண்டும் என்ற சூழ் நிலை உள்ளபடியால், இலங்கை முஸ்லிம்களின் நீண்டகால வராலற்றினை பின்னோக்கி பார்க்கின்றபோது கடல்வழியாக வந்த ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்த குழுவினர் 1602 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 02 ஆம் திகதி ஒல்லாந்தரது கப்பலொன்றின் தளபதியான ஜொரிஸ் வான் ஸ்பில் பேக்கன் என்பவரே சாய்ந்தமருதில் தரையிறங்கி பின்னர் சம்மாந்துறை பிரதேசத்தில் தங்கியிருந்து கண்டிக்கு சென்று முதலாம் விமல தர்ம சூரிய மன்னனைச் சந்தித்தாகவும் வரலாறு கூறுகின்றன.
இருந்தும் அவரின் இவ்வருகையின் போது மட்டக்களப்பு பிரதேசத்தில் தான் சந்தித்த சோனகர் மற்றும் துலுக்கர் பற்றியும் தனது நாட்குறிப்பேட்டில் விபரித்துள்ளார். மேலும் இதற்கு சாண்றாக 1062 ஆம் ஆண்டில் வெளியான 'ஜெனல் ஒப் ஸ்பில்வேகன் - 1062' எனும் நாவலின் 23 ஆம் பக்கத்திலிருந்து 1997 ஆம் ஆண்டு கே.டி.பத்திரனவின் மொழிபெயர்ப்பின் மூலம் சாய்ந்தமருதின் வரலாரும், உண்மைத்தன்மையும் விளக்கி காட்டப்படுகின்றது.
அதற்கமைவாக சாய்ந்தமருது பிரதேசத்தில் சுமார் 27,110 சனத்தொகை பரம்பளையும் 4.65 சதுர கிலோ மீற்றர் பரப்பளவையும் கொண்ட மிகப் பெரிய ஊர்தான் சாய்ந்தமருது பிரதேசமாகும். இப்பரதேசத்தில் தற்போது மூன்று மையவாடிகள் மாத்திரமே காணப்படுகின்றன. அது மாத்திரமல்ல சுனாமியின் காரணமாக சாய்ந்தமருது கரைவாகு வட்டையில் வொலிவோரியன் வீட்டுத்திட்டம் மற்றும் இபாட் வீட்டுத்திட்டம் போன்ற குடியிருப்புக்களில் குடியிருக்கும் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக சுமார் 2 கீலோமீற்றர் நடந்து சென்று நல்லடக்கம் செய்யவேண்டிய சூழல் உருவாகியுள்ளதுடன் குடியேரியுள்ள மக்களுக்கும் ஒரு மையவாடி தேவையாகயுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல், சின்னப்பள்ளி வாசல் மற்றும் அக்பர் பள்ளி வாசல் வளவுகளிலும் தக்வா பள்ளி மையவாடியிலும் ஜனாஸாக்கல் நல்லடக்கம் செய்யப்பட்டு வந்தபோதும் இன்று சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல், சின்னப் பள்ளிவாசல் மற்றும் அக்பர் பள்ளிவாசல் ஆகிய வளவுகளில் நல்லடக்கம் செய்யப்படுவது முற்றாக தடைசெய்யபட்டுள்ளதுடன், தற்போது தக்வா பள்ளிவாசல் மையவாடி, அக்பர் பள்ளிவாசல் மையவாடி (அக்பர் பள்ளிவாசலுக்கு புரம்பாகவுள்ள மையவாடிகள் என மொத்தம் மூன்று மையவாடிகளில் மாத்திரமே இன்று ஜனாஸாக்கல் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
இவ் மூன்று மையவாடிகளையும் பராமரிப்பதிலிருந்து ஒதுங்கிவரும் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசலில் இயங்கும் ஜனாஸா நலம்புரி அமைப்பானது தற்பொழுது பெயரலவில் இயங்கி வருகின்றது. இந்த செயலினைக் கிராம மொழி நடையில் கூறுவதென்றால் 'ஊரார் கோழியை அருத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதைப் போன்றதாகும்' இந்த அமைப்பினரது செயற்பாடுகள்.
தக்வா பள்ளிவாசல் மையவாடி மாத்திரமல்ல ஏனைய இரண்டு மையவாடிகளையும் இன்று பார்த்தால் பற்றைக் காடாக காணப்படுவத்தோடு மின்குமிழ்களும் சில நேரங்களில் ஒளிராமல் இருள் சூழ்ந்த நிலைமையில் காணப்படுகின்றது. இதனால் இரவு நேரங்களில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதிலும் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர் நோக்கி வருகின்றனர். இதனை கருத்திற் கொண்டும் மக்களின் நன்மை கருதி உரியவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளுவார்களா? என்று இப்பிரதேச மக்கள் அங்களாக்கின்றனர்.
எனவே மையவாடி என்பது ஒரு மனிதன் உலகில் வாழ்ந்து விட்டு மரனித்த பின்னர் அந்த மனிதனைக் கொண்டு இறுதியாக அடக்கம் செய்யுமிடம்தான் மையவாடியாகும்.
அந்த இடத்தைக் கூட நாம் துப்பரவு செய்யமாலும், மரனத்தை பயந்து கொள்ளாமலும் இருந்து வரும் இந்த ஜனாஸா நலன்புரி அமைப்பின் செயலானது ஒரு வேண்டாம் வெருப்புக்காக இருந்து வரும் செயலாகத்தான் தெரிகின்றது. இக்கொள்கையை குறிப்பிட்ட அமைப்பினர் மறந்து செயற்படுவதோடு நாமும் மரனித்த பின்னர் இந்த மையவாடியில் தான் அடக்கம் செய்யப்படுவோம் என்ற தூய எண்ணத்தை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் இந்த மையவாடியை மிக துப்பரவாகவும், சுத்தமாகவும், வெளிச்சமுள்ளதாகவும் வைத்திருப்பது ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு மட்டுமல்ல நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்புமாகும். என்ற இறை பக்தியுடன் செயற்ட எத்தனிப்போமாக.

0 comments :
Post a Comment