கிழக்கு அரியாலையில் உல்லாசப் பயணிகளைக் கவரக்கூடிய வகையில் "பீச்´


கிழக்கு அரியாலையில் உல்லாசமான கடற்கரை அமைக்க நல்லூர் பிரதேச சபை முடிவு

கிழக்கு அரியாலையில் உல்லாசப் பயணிகளைக் கவரக்கூடிய வகையில் "பீச்´ ஒன்றை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான தீர்மானம் கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

முதற் கட்டமாகப் பிரதேச சபைத் தலைவர்,செயலாளர், பொறியியலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் அரியாலைக்குச் சென்று இடத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் கடற்கரைப் பகுதியில் 21 பரப்புக் காணியையும் ஆலயம் ஒன்றுக்குச் சொந்தமான5 ஏக்கர் காணியையும் நீண்டகாலக் குத்தகைக்குப் பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

"பீச்´ அமைப்பதற்கான திட்டத் தயாரிப்புப் பணிகளில் நல்லூர் பிரதேச சபையினர் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிது. இதன்படி கடற்கரையில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள சிறிய தீவைத் தெரிவு செய்து அதனை அழகுபடுத்தி உல்லாசப் பயணிகளுக்கான சிறிய குடில்களை அமைப்பது, போக்குவரத்தில் ஈடுபடச் சிறிய படகுகளைப் பயன்படுத்துவது, கடற்கரைப்பகுதியில் சிறிய குடில்கள் மற்றும் விடுதி வசதிகளை ஏற்படுத்துவது போன்ற திட்டங்களை நல்லூர் பிரதேச சபையினர் தயாரித்து வருவதாகத் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :