சுலைமான் ராபி
ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து அவன் இறக்கும் வரைக்கும் அதன் இடையில் நடைபெறுகின்ற சகல செயற்பாடுகளுடனும் ஒன்றிணைக்கப்பட்ட கருமங்களை ஆற்றுகின்ற ஓர் இடமாகவே பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றன." என பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ. ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேசத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பிரதேச செயலக கட்டிடத் திறப்பு விழா இன்று சனிக்கிழமை நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியானி திருமதி றிபா ஜலீல் தலைமையில் நடைபெற்றது. இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ. ஜோன் செனவிரத்ன அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...
"அரச இயந்திரத்தை சரியான முறையில் வழி நடாத்துகின்ற பெரும் பணியை நிறைவேற்றுகின்ற ஓர் இடமே பிரதேச செயலகமாகும். மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கக் கூடியவகையில் நல்ல சுவாத்தியமான புதிய பிரதேச செயலகக் கட்டடங்களை அமைக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் 44.2 மில்லியன் ரூபா செலவில் இந்தக் கட்டடம் நிந்தவூர் பிரதேசத்தில் நல்ல சூழலில் அழகான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பல இடங்களிலும் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கட்டடங்கள் மாத்திரம் அமைக்கப்படுவதனால் சிறந்த நிர்வாக செயற்பாடுகள் நடைமுறைகள் நடைபெற்றுவிட முடியாது. அங்கு பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கும் அவ்வப்போது போதியளவாக அறிவைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
கிராம மட்டத்திலும் மாவட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பலதரப்பட்ட தேவையுடைய மக்கள் உள்ளனர். அவர்களுக்கு நாம் சிறந்த சேவையினை வழங்க வேண்டும். தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற பாகுபாடுகள் எம்மிடமிருந்து களையப்பட்டு எமது பணிகளை இதய சுத்தியுடன் மக்களுக்காக பணியாற்ற வேண்டும். எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற நல்ல அபிவிருத்தித் திட்டங்களிலும் நாம் பக்க பலமானவர்களாக இருந்து பணியாற்ற வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எமது நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் காரணமாக வடக்கில் சிறந்த நிர்வாகத்தை செய்ய முடியாதிருந்ததை நாம் சகலரும் அறிவோம். தற்போது அந்த நிலை இல்லாமல் செய்யப்பட்டு சகல பிரதேசங்களிலும் நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

தமிழ்மொழி மூலம் பணியாற்றுவதற்காக 112 அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிகளை பெற்று வருகின்றனர். அதேபோன்று 5000 முகாமைத்தவ உதவியாளர்களை சேர்த்துள்ளோம். அடுத்த ஆண்டு 3000 முகாமைத்துவ உதவியாளர்களை இணைத்துக் கொள்ளவுள்ளோம்.
எமது அரசாங்கம் அண்மையில் 51,000 பட்டதாரிகளை பணிலுநர்களாக இணைத்துக் கொண்டுள்ளது. அவர்களில் தற்போது 21,000 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மீதியாக உள்ளவர்களுக்கும் நல்ல எதிர்காலம் உண்டு. இவ்வாறு எமது அரசாங்கம் பொறுப்புணர்வுடன் பணியாற்றி வருகின்றது. கடந்த காலத்தில் தொழில் தேடிச் சென்ற பட்டதாரிகளை கண்ணீர் புகை அடித்து விரட்டிய அரசியல் வரலாறுகள் உண்டு.
எமது நாட்டின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கூடுதலாக கிராம சேவகர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன. இதனை நிவர்த்திசெய்ய போட்டிப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் இவ்வாண்டின் ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் 4000 கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளவுள்ளோம்.
அத்துடன், மக்களுக்கு சிறந்த பணியினை ஆற்றும் வகையில் முதல்கட்டமாக 10 மாவட்டத்திலுள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கு மடி கனணிகளை வழங்கவுள்ளோம்.
நிந்தவூர் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இக்கட்டிடத்தினை இந்தப் பிராந்திய மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் இப்பிரதேச நாடாளுமன்ற உறுப்பினரான பைசால் காசிம் என்னுடைய அமைச்சுக்கு பல தடவைகள் வந்துள்ளார். அதனை நான் இந்த சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்கின்றேன்."
எனவும் தெரிவித்தார்.
இந்த வைபவத்தில் கௌரவ அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசால் காசிம், சட்டத்தரணி சிறியாணி விஜேவிக்ரம, மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனதுறை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சர் விமலவீர திசாநாயக்க, மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் எல்.டி. அல்விஸ், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஜினசேன உட்பட பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment