(சலீம் றமீஸ்,கே.சி.எம்.அஸ்ஹர்)
மானிட நேயம் என்பது பற்றி ரசூல் (ஸல்) அலைஹிவஸல்லம் கூறியுள்ளமை மிக முக்கியமானதாகும்.
அல்லாஹ்வுடைய படைப்பை, உயிரை யார் கண்ணியப் படுத்துவாரோ அவர்தான் மானிட நேயர். பாராட்டு எனும் சொல் மிகவும் பெருமதியானது புகழ் என்பது இறைவனுக்கு மட்டும் உரியது.
எனவேதான் இன்று பாரட்டப் படுவர்கள் மக்களால் பேசப்பட்டு அங்கிகரிக்கப்பட வேண்டும். இப் பாரட்டை பாதுகாப்பது உங்கள் கடமை. இறைவன் திருப்தி படுகின்ற அளவுக்கு நாம் எல்லோரும் நடக்க வேண்டும்.
என மட்டக்களப்பு மாவட்ட நீதவான் என்.எம்.அப்துல்லா ஹாபிஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணி சம்மேளனத்தின் 34வது வருட பூர்த்தியிட்டு 44 சமூக சேவையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அமைச்சர் அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளர் ஏ.பி.தாவூத் தலைமையில் அட்டாளைச்சேனை லொய்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற போது மாவட்ட நீதவான் என்.எம்.அப்துல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.
இவ் விழாவில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னாணியின் தலைவர் எம்.ஐ.உதுமாலெவ்வை 34வது வருட சேவை நலன் பாராட்டி விசேடமாக கௌரவிக்கப்பட்டார்.
தொழிலதிபர் நபீல், பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.அனிபா, கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.காசிம் தேசிய சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பின் தலைவர் எம்.எஸ். ஜஃபர், உட்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.








0 comments :
Post a Comment