திராய்க்கேணி ஸ்ரீ மாரியம்மன் கோயில் வளாகம் சிரமதானம்.


இக்பால் எம் பிஹாம்

லக சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித்திட்டத்தினூடாக திராய்க்கேணி கிராம அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (09.06.2013) திராய்க்கேணி ஸ்ரீ மாரியம்மன் கோயில் வளாகம் சிரமதானம் செய்யப்பட்டது.


கிராம அபிவிருத்தி அமைப்பின் தலைவர் ரீ. யோகநாதன் தலைமையில் நடைபெற்ற இச்சிரமதான நிகழ்வில் மீள் எழுச்சித் திட்ட அம்பாரை மாவட்ட பிரதித் திட்டப் பணிப்பாளர் திஸ்ஸ பல்லேகும்புர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிரமதானப் பணியினை ஆரம்பித்து வைத்தார்.

 இதன்போது சமூக வலுவூட்டல் இணைப்பாளர் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர். இச்சிரமதானத்தினை தொடர்ந்து கோயில் வளாகத்தில் மர நடுகை சேதனைப்பசளை தயாரிக்கும் முறை மற்றும் அதன் அவசியம், சூழலைப் பாதுகாத்தல், உணவு வீன்விரயமாவதைத் தடுத்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :