“உதிரம் கொடுப்போம் – உயிர்களை காப்போம்” சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் இரத்ததான முகாம்!



ம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பகுதியில் மனிதநேய உணர்வை உயர்த்திய ஒரு சிறப்பான சமூகச் சேவை நிகழ்வாக, சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை ஏற்பாடு செய்திருந்த இரத்ததான முகாமும் கௌரவிப்பு நிகழ்வும் 2026 மே 02 ஆம் திகதி அல் ஹிலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பேரவையின் தலைவர் எஸ்.எம். நஸீர் அவர்களின் வழிகாட்டலிலும், ஸூரா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் ஐ.எம். ரஃபி (ஹிழ்ரி) அவர்களின் பங்குபற்றலுடனும் பொதுச் செயலாளர் யூ.கே. காலித்தீன் அவர்களின் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வு, சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியதோடு, மனித உயிர்களின் மதிப்பை உணர்த்தும் ஒரு அரிய முயற்சியாக அமைந்தது.

பிரதேச வைத்தியசாலைகளில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டை தீர்க்கும் நோக்கில், “உதிரம் கொடுப்போம் – உயிரைக் காப்போம்” என்ற உயரிய தொனிப்பொருளில் இம்முகாம் நடத்தப்பட்டது.
“ஒரு உயிரைக் காப்பாற்றுவது, மனிதகுலத்தையே காப்பாற்றுவது போன்றது” என்ற அல் குர்ஆன் போதனையை அடிப்படையாகக் கொண்டு, மனிதாபிமான சேவையின் உன்னதத்தைக் காட்டும் விதமாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வு Myown Education Aid சமூக சேவை பிரிவும் United Power House நிறுவனமும் வழங்கிய பூரண அனுசரணையுடன், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்து இரண்டாவது முறையாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

நிகழ்வின் பிரதான அனுசரணையாளர்களில் ஒருவராகவும், முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபாவின் புதல்வரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராகவும், Myown Education Aid நிறுவனத்தின் ஸ்தாபகராகவும் விளங்கும் சமூகச் செயற்பாட்டாளர் றிஸ்லி முஸ்தபா அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

சமூக நலத்திற்காக அவர் தொடர்ந்து செய்து வரும் அர்ப்பணிப்பான பணிகளை மதித்து, சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையினால் அவருக்கு சிறப்பு கௌரவமும் வழங்கப்பட்டது. இக்கௌரவ நிகழ்வில் பேரவையின் ஸ்தாபக தலைவர் அஸ்வர் அப்துல் சலாம் அவர்களின் மகன் உட்பட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இரத்ததான முகாமில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், இரத்த வங்கி பணியாளர்கள் ஆகியோர் நேரடியாக பங்கேற்று தங்களது சேவையை வழங்கினர். மேலும் பெண்கள் உட்பட பல பொதுமக்கள் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்து மனித நேயத்தின் உயரிய எடுத்துக்காட்டை வெளிப்படுத்தினர்.

இரத்தம் என்பது செயற்கையாக உருவாக்க முடியாத அத்தியாவசிய உயிரியல் வளமாகும். அவசர அறுவை சிகிச்சைகள், விபத்துகள், கர்ப்பிணி பெண்களின் சிகிச்சைகள், இரத்த நோய்கள் போன்ற பல்வேறு அவசர நிலைகளில், இரத்த தானம் உயிர் காப்பாற்றும் ஒரே வழியாக மாறுகிறது. ஒரு நபர் அளிக்கும் ஒரு பை இரத்தம், மூன்று பேரின் உயிர்களை காப்பாற்றும் சக்தி உடையதாகும்.

இந்த வகையில், சாய்ந்தமருது பகுதியில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாம், ஒரு சாதாரண நிகழ்வாக அல்லாமல், பல உயிர்களுக்கு நம்பிக்கை வழங்கும் மனிதாபிமான இயக்கமாக மாறியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் சமூகத்தில் ஒற்றுமை, இரக்கம் மற்றும் பரிவு போன்ற உயரிய பண்புகளை வளர்க்கின்றன.

சமூக சேவையை வாழ்வின் கடமையாகக் கொண்டு செயல்படும் அமைப்புகள் மற்றும் நபர்கள் இருப்பது, ஒரு சமூகத்தின் உண்மையான பலமாகும். “உதிரம் கொடுப்போம் – உயிரைக் காப்போம்” என்ற செய்தியை செயல்முறையில் எடுத்துக்காட்டிய இந்த நிகழ்வு, மற்ற சமூகங்களுக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது.

இதேபோன்ற மனிதநேய முயற்சிகள் தொடர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
















































 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :