13ஐ ஒழிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகள் இடம் பெறக்கூடாது என முஸ்லிம் மக்கள் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இது சம்பந்தமாக அக்கட்சி தெரிவித்திருப்பதாவது,இரண்டு மாகாணஙகள் விரும்பினால் இணையலாம் என்ற ஷரத்தை அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்களின் அனுமதியுடன் நீக்கிய அரசாங்கம் ஏனைய திருத்தங்களை பாராளுமன்ற தெரிவுக்குழுவினூடாக நிறைவேற்றிக்கொள்ளவுள்ளது.
சுதந்திரத்துக்குப்பின்னரான இந்த நாட்டின் இனபப்பிரச்சினைக்குத்;தீர்வாக பல தெரிவுக்குழுக்கள் அமைக்கப்பட்டும் அவை எவையும் சிறுபான்மை மக்களுக்;கு எதுவித நன்மையையும் கொண்டு வரவில்லை. இந்த நிலையில் இந்திய தலையீடு காரணமாக 13வது திருத்தச்சட்டம் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. மாகாணசபை ஆட்சி முறை மூலம் இனப்பிரச்சினை தீராத போதும் ஓரளவு பெயரளவிலான சில நன்மைகளாவது கிடைத்தன என்பதை மறப்பதற்கில்லை.
இப்போது அவற்றையும் நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு இந்த பாராளுமன்ற தெரிவுக்குழு பயன்படுத்தப்படவுள்ளது.
நமது நாட்டின் பாராளுமன்ற தெரிவுக்குழு எவ்வாறிருக்கும் என்பதை கடந்த காலங்களில் கண்டுள்ளோம் ஹலால் பிரச்சினையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட முஸ்லிம் அமைச்சர்களை அதிகமாகக்கொண்ட அமைச்சர்கள் தெரிவுக்குழு கூட சுதந்திரமாக செயற்பட முடியாதவாறு மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் போது 13வது திருத்த சட்டத்தை மாற்றுவதற்கான தெரிவுக்குழு நிச்சயம் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்.
ஆகவே வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகளால் சுகம் அனுபவித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ், அதாவுள்ளா காங்கிரஸ், ரிசாத் காங்கிரஸ் என்பவை இந்த தெரிவுக்குழுவில் இடம் பெறுவது என்பது முஸ்லிம்களைக்கொண்டே முஸ்லிம்களின் கண்களைக்குத்துவதாகவே முடியும். ஆகவே இத்தெரிவுக்குழுவில் இடம் பெறுவதை மேற்படி கட்சிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

0 comments :
Post a Comment