அஸாத் சாலி காத்தான்குடியில் நடாத்தவிருந்த கூட்டம் நகரசபையால் தடைசெய்யப்பட்டது.


கொழும்பு மாநகர முன்னாள் பிரதிமேயர் அஸாத் சாலி காத்தான்குடியில் நடாத்தவிருந்த கூட்டம் காத்தான்குடி நகர சபையின் மண்டப அனுமதி மறுப்பினால் கூட்டம் நடாத்துவதை கைவிட்டுள்ளதாக அந்த கூட்டத்தின் எற்பாட்டாளரும் கிழக்கு முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் செயலாளருமான கே.எம்.முகம்மட் பஸ்லி தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அஸாத்சாலி எதிர்வரும் 29.6.2013 அன்று காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் கூட்டம் ஒன்றை நடாத்தவிருந்தார்.

இந்த கூட்டத்தை கிழக்கு முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த கூட்டத்தை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடாத்துவதற்கு காத்தான்குடி நகர சபையிடம் அனுமதி கேட்ட போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த கூட்டத்தின் எற்பாட்டாளரும் கிழக்கு முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் செயலாளருமான கே.எம்.முகம்மட் பஸ்லி தெரிவிக்கையில்,

“பொதுமக்களுக்கு அஸாத்சாலி நன்றி தெரிவிக்கும் வகையில் அக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது, அதற்காக காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தை அனுமதி கேட்டு முறையாக காத்தான்குடி நகர சபைக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை கொடுத்தோம்.

அக்கடிதத்தை அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர் பாறூக் என்பவர் மேலதிக நடவடிக்கைக்காக காத்தான்குடி நகர சபை பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் என்பவருக்கு அனுப்பினார்.

இதையடுத்து காத்தான்குடி நகர சபை பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீமை சந்தித்து அனுமதி கேட்டோம் ஆனால் அவர் அனுமதி தரமுடியாது என மறுத்து விட்டார் என அவர் கூறினார்.

இது தொடர்பாக காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீமை தொடர்பு கொண்டு கெட்ட போது அனுமதியை மறுக்கவில்லை சில நிபந்தனைகள் தொடர்பாக பேசுவதற்கு கூட்டத்திற்கான மண்டப அனுமதியை கோரியவர்களை வருமாறு அழைத்தேன் என அவர் தெரிவித்தார்.

எனினும் இக் கூட்டம் மண்டப அனுமதி மறுப்பினால் காத்தான்குடி கூட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் மேற்படி பஸ்லி தெரிவித்தார்.KI
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :