விரிவுரையாளரை தாக்கியமாணவன் விசம் அருந்திய நிலையில் வைத்தியசாலையில்.

நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட பீட விரிவுரையாளரை தாக்கியதாகக் கூறப்படும் சட்டபீட மாணவனின் இரத்த மாதிரி, கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாக களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் லயனல் மொஹாந்திரம் தெரிவித்தார்.

வைத்தியருமான மேற்படி மாணவன், குடித்ததாகக் கூறப்படும் விஷம் யாதென கண்டுபிடிப்பதற்காகவே அம்மாணவனின் இரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேற்படி மாணவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் இன்னமும் மயக்க நிலையிலேயே காணப்படுவதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

விளக்கமறியல் கைதியான அம்மாணவன் யாழ்ப்பாணம், பலாலி பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

விரிவுரையாளர் மீது அம்மாணவன் தாக்குதல் நடத்துவதை நேரில் பார்த்ததாகக் கூறப்படும் மூவரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் மும்முரமாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :