சந்திரிகா, பொன்சேகா களத்தில் இறங்கும் வடமேல் மாகாணசபை தேர்தல்


டை­பெ­ற­வுள்ள வடமேல் மாகா­ண­சபை தேர்­தலில் சரத் பொன்­சே­காவின் கட்­சி­யுடன் இணைந்து முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவின் நெருங்­கிய ஸ்ரீ.ல.சு.க. உறுப்­பி­னர்கள் போட்­டி­யிட உள்­ள­தாக தெரி­ய­ வந்­துள்­ளது.

இது தொடர்­பான பேச்­சு­வார்த்­தைகள் நிட்­டம்­புவ – ஹொர­கொல்­லையில் முன்னாள் ஜனா­தி­ப­தியின் தலை­மையில் நடை­பெற்ற கூட்­டத்தில் குரு­ணாகல் பகு­தியில் இருந்து பெரு­ம­ளவு ஸ்ரீல.சு.க.உறுப்­பி­னர்கள் கலந்து கொண்­டுள்­ளனர்.

இதன்­போது, வேட்­பா­ளர்­களின் பெயர்ப்­பட்­டி­யலும் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறியக் கிடைத்­துள்­ளது. குரு­ணாகல் மாவட்­டத்தில் மட்­டுமே அதி­க­ளவு இரா­ணுவ வீரர்கள் வாக்­கா­ளர்­க­ளாக உள்­ளனர்.

அவர்­களின் வாக்­கு­களைப் பெற்று கொள்­வது இக் கட்­சி­யி­னரின் முக்­கிய நோக்­க­மாக உள்­ள­தெ­னவும் இம்­முறை தானும் போட்­டி­யிட உள்­ள­தா­கவும் குருணாகல் நகரின் பிரபல வர்த்தகரும் ஸ்ரீ.ல.சு.க. சிரேஷ்ட உறுப்பினருமான சேன அம்பலேகொட தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :