மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்காங்கேணி கிராமத்தில் இரு மதக்குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சுங்காங்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, சுங்காங்கேணி மெதடிஸ் திருச்சபையின் ஒலிபெருக்கியில் ஜெப வழிபாடும் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, திருச்சபையில் வழிபாடு இடம்பெற்றுக் கொண்டிருந்த ஒலிபெருக்கி நிறுத்துமாறு விநாயகர் ஆலயத்திலிருந்து சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலில் முடிவடைந்துள்ளது. இம் மோதலில், ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :
Post a Comment