மின்சாரக் கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகி ஒருவர் மரணம்.


கொழும்பிலுள்ள இலங்கை மின்சார சபையின் தலைமையகத்திற்கு தனது மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த வந்த வயோதிபரொருவர் மின்சாரக் கட்டணத் தொகையைப் பார்த்தவுடன் அதிர்ச்சிக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

பத்தரமுல்ல, ரொபர்ட் குணவர்த்தன மாவத்தையைச் சேர்ந்த எஸ்.பி.ஜி. சமரதாஸ என்ற 61 வயது வயோதிபரொருவர் இவ்வாறு உயிரிழந்தவராவார்.இச் சம்பவம் தொடர்பில் ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறித்த நபர் நேற்று முன்தினம் மாலை 9 க்கும் 10 மணிக்கும் இடையில் இலங்கை மின்சார சபையின் தலைமையகத்திற்கு மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த வந்துள்ளார். வந்தவர் அங்கு கட்டணம் செலுத்துமிடத்திற்குச் சென்று தனது மின்சாரக் கட்டணம் இவ்வாறு திடீரென மிக அதிகளவில் அதிகரித்து இருப்பதற்கான காரணம் என்னவென வினவியுள்ளார்.

உடனே, அதற்கான காரணத்தை குறித்த அலுவலகத்தர் கூறியவுடன் அதிர்ச்சியும், மயக்கமும் கொண்டவராக அந்த வயோதிபர் வாடிக்கையாளர்கள் அமரும் இடத்திற்கு சென்று அமர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் மூர்ச்சையுற்றவராக சுயநினைவிழந்து கீழே விழுந்துள்ளார்.

இதேவேளை, துரிதமாக செயற்பட்ட மின்சார சபை ஊழியர்கள் அவரை அம்புலன்ஸ் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் குறித்த வயோதிபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும், அவரது உயிரிழப்பிற்கு மார்படைப்பே காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக மின்சாரக் கட்டணங்கள் தமது வழமையான கட்டணத்தை விட மும்மடங்கு அதிகரித்திருப்பதாக வாடிக்கையாளர்கள் பெரும் கவலை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.vk
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :