ரயில் பாதையில் 5 மாதப் பெண் குழந்தை ஒன்றை பொலிஸார் உயிருடன் மீட்டுள்ளனர்.

கொழும்பு, கோட்டை லேக்ஹவுஸ் கட்டிடத்திற்கு பின்னால் உள்ள ரயில் பாதையில் குழந்தை ஒன்றை பொலிஸார் உயிருடன் மீட்டுள்ளனர். 5 மாத பெண் குழந்தை ஒன்றே இவ்வாறு அநாதரவான நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் குழந்தையை மீட்டு பொரளை சிறுவர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தற்போது குழந்தை பொரளை சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றது. குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :