சீட்டிலுப்பில் பணம் கிடைத்துள்ளது என்று அழைப்பு வந்துள்ளதா-பொலிசாரை அழையுங்கள்.

அதிஸ்ட லாபச் சீட்டிலுப்பில் பணம் கிடைக்கப் பெற்றுள்ளது என பொதுமக்களுக்கு கிடைக்கப் பெறும் அநாமதேய அழைப்புக்கள் தொடர்பில் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸ் மூலஸ்தானம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் மூலஸ்தானம் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தும் சில நபர்கள் அதிஸ்ட லாபச் சீட்டிலுப்பில் பெருந் தொகை பணம் கிடைக்கப்பெற்றுள்ளது என தெரிவித்து மோசடிகளில் ஈடுபடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபடுபவர்கள் ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கு இலக்கத்தை வழங்கி அதில் பணத்தை வைப்பிலிடுமாறு தெரிவிப்பதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறான பண மோசடி மூலம் பாதிக்கப்பட்ட பலர் தற்போதும் முறைப்பாடு செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறான தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் தகவல்கள் கிடைக்கப் பெறும் பட்சத்தில் உடனடியாக பொலிஸில் தெரிவிக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :