( நப்றிஸ் )
ஐக்கிய தேசியக்கட்சியின் வளர்ச்சியை பொறுக்க முடியாதவர்களும்,
அரசாங்கத்தின் பிழைகளை மறைக்க முற்படுபவர்களுமே காலி பலபிட்டியவில்
ஐக்கிய தேசியக் கட்சியின் வாகனத் தொடரணிக்கு தாக்குதல் நடத்தியுள்ளனர்
இதனை வன்மையாக கண்டிப்பதுடன் ஜனநாயக ரீதியாக செயற்பட முன்வருமாறு நாம்
காடையர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம் என ஐக்கிய தேசியக்கட்சியின் அம்பாரை
மாவட்ட முஸ்லிம் பிரதேச பிரச்சாரச் செயலாளர் ஏ. அப்துஸ்ஸலாம்
தெரிவித்தார்.
காலி பலபிட்டியவில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாகனத் தொடரணிக்கு
தாக்குதல் நடத்தப்பட்மை தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே
மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவர் குறிப்பிடும்போது,
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் செல்வாக்கை ஜீரணிக்க
முடியாதவர்களே இவ்வாறான காடைத்தனத்தை செய்துள்ளனர். எதிர்கட்சித்தலைவர்
றணில் விக்ரம சிங்க உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்ற வாகனத்
தொடரணியை இடைமறித்து கற்களாலும், தடிகளாலும் தாக்கிய கும்பலிடமிருந்து
எவ்வித பாதிப்புக்களுமின்றி எதிர்க்கட்சித்தலைவர் உள்ளிட்ட குழுவினர்
தப்பி்க்கொண்டனர். ஆனாலும், ஐக்கிய தேசியக்கட்சிக்காரர்களுக்கும்
வாகனங்களுக்கும் சேதம் விளைவித்தமையானது கண்டிக்கத்தக்க விடயமாகும்.
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், இறந்த மீனவர்களின்
குடும்பங்களுக்கும் ஆறுதல் கூறுவதற்காக அங்கு சென்றவர்களுக்கு இவ்வாறான
காடைத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. நாட்டின்
எதிர்க்கட்சிக்காரர்கள் என்ற அடிப்படையில் ஐ.தே.கட்சிக்காரர்களுக்கும்
ஆறுதல் கூறும் உரிமை இருக்கிறது என்பதை குறிப்பிட்ட காடையர் கூட்டம்
அறிந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவை எதிர்க்கட்சித்தலைவர் பேணி
வருவதுடன், சுகபோகங்களையும் அனுபவிக்கிறார் என்ற பொய் குற்றச்சாட்டு
சொல்பவர்களுக்கு இந்த அடாவடித்தன தாக்குதல் மூலம் அந்த குற்றச்சாட்டில்
எவ்வித உண்மையுமில்லை என்பது புலனாகும் எனவும் குறிப்பிட்டார்.

+abdus+salam+Unp.jpg)
0 comments :
Post a Comment