மாணவன் ஒருவரை காணவில்லை என யாழ். அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு


யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவரை காணவில்லை என யாழ். அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்புக்கு நண்பர்களுடன் சென்ற தனது மகன் காணாமற்போயுள்ளதாக அச்சிறுவனின் தாயார் நேற்று (23) அச்சுவெலி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்கு பகுதியைச் சேந்த கவிதாசன் ரிசாந்தன் (15 வயது) என்ற சிறுவனே இவ்வாறு காணாமற் போயுள்ளார்.

இவரது நண்பர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில் தனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் அவருக்கு என்ன நடந்தது எனத் தெரியாதுள்ளதாக தாயார் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இம்மாணவன் கடந்த 19ஆம் திகதியிலிருந்து காணாமற் போயுள்ளதாக அவரது தாயார் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :