.jpg)
நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது ஆலோசகர்களுடன் கிழக்கு மாகாணசபையை கலைப்பது பற்றி ரகசிய ஆலோசனை நடத்தியதாக கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ரகசிய ஆலோசனையில் அரசின் 13 வது திருத்தச்சட்டத்தை வலுவிழக்க வைக்கும் அரசின் முனைப்புக்கு எதிராக கிழக்கு மாகான சபை பிரேரணை ஒன்றை நிறைவேற்றும் சாத்தியம் பற்றி ஜனாதிபதி அதிருப்தியை வெளியிட்டதாக அறிய வருகின்றது.
இவ்வாறான ஒரு பிரேரணை கொண்டுவரப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக அரசாங்கத்தினால் 13 வாக்குகளை மாத்திரமே பெற முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை உத்தேச பிரேரணைக்கு முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பிள்ளையான் குழுவினர் ஆதரவளிக்கும் பட்சத்தில் பிரேரணை 24 வாக்குகளை பெற்று வெற்றி அடையும் வாய்ப்புகள் உள்ளது.
கடந்த வாரம் கல்முனை நகர பிரதான வீதியில் இடம்பெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அரசின் நடவடிக்கைகளால் விசனமுற்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் “பெரும்பான்மை முஸ்லிம்களை பிரதிநித்துவ படுத்தும் முஸ்லிம் காங்கிரசை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து நீக்கி விட்டு எடுக்கப்படும் எந்த முடிவும் கடைசியில் குப்பை தொட்டியயையே சென்றடையும்” என கூறியிருந்தார்.
13 வது திருத்தச்சட்டத்தை வலுவிழக்க வைக்கும் அரசின் திட்டத்துக்கு கிழக்கில் எதிர்ப்பு அதிகரிப்பதால் கிழக்கு மாகாணசபை பிரேரணை ஒன்றை நிறைவேற்ற முன்னர் மாகாணசபை கலைக்கப்பட்டு மாகான நிர்வாகம் அரசின் கைகளுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என ஜனாதிபதி அங்கு சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகின்றது. (Colombotelegraph)
0 comments :
Post a Comment