இந்தியாவில், இலங்கை தொழிலதிபரை கடத்திய 8 பேரின் பிணை மனு தள்ளுபடி.

ந்தியாவில், இலங்கை தொழிலதிபரை கடத்திய 8 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையொட்டி அவர்களது பிணை மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் கணபதி பிள்ளை தவராஜா (59). இவரது மனைவி ஜலஜா. மகள் தர்ஷினி (24). இவர்களுக்கு இங்கிலாந்தில் பெட்ரோல் பங்க், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளன.

இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ளனர். கடந்த மாதம் 29ம் திகதி தமிழகத்தை சுற்றிப்பார்க்க சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய தவராஜாவையும் அவரது மனைவியையும் ஒரு கும்பல் கடத்தி சென்று நெய்வேலி மந்தாரகுப்பத்தில் அடைத்து வைத்தது.

அவர்களை மீட்ட பொலிசார் கடத்தல் தொடர்பாக கண்ணன் என்ற தர்மலிங்கம் (33), தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை இந்திரா அந்தோணி மேரி (40), மதியழகன், பிரபு, சரவணன், சதீஷ்குமார், வசந்த், இளங்கோ ஆகிய 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கண்ணன் உள்ளிட்ட 8 பேரும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பிணைகோரி மனு தாக்கல் செய்தனர். அதை முதன்மை செஷன்ஸ் நீதிபதி சொக்கலிங்கம் விசாரித்தார். அரசு சட்டத்தரணி ஜெகன் பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை தள்ளி வைத்த நீதிபதி, பதில் மனுதாக்கல் செய்ய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இம்மனு மீதான விசாரணை முதன்மை செஷன்ஸ் நீதிபதி சொக் கலிங்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஜெகன் ஆஜராகி, சத்யா, கலியமூர்த்தி ஆகிய 2 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களை பொலிசார் 21ம் திகதி வரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பிணை வழங்கினால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும்.

மேலும் மனு தாக்கல் செய்துள்ள 8 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எனவே பிணை வழங்கக் கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து, 8 பேரின்
பிணை மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :