
கேள்வி மனு கோரல் மூலமே குறித்த டீசல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக பெற்றோலிய வள அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்துள்ளார்.
ஆயினும் குறித்த டீசலில் காணப்படும் உள்ளடக்கங்கள் சில நாட்டிற்கு பொருத்தமற்றவை என்பது ஆய்வு கூடத்தில் உறுதிசெய்யப்பட்டமையினால் குறித்த டீசல் நிராகரிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
குறித்த நிறுவனத்திற்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொருத்தமான உள்ளடக்கங்களைக் கொண்ட டீசல் தொகையை மீண்டும் நாட்டிற்கு அனுப்பிவைக்குமாறு குறிப்பிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment