சகோதரியின் கணவரால் கடத்திச் சென்று கர்ப்பிணியாக்கப்பட்ட 15 வயது சிறுமி.

15 வயது மாணவியான சிறுமியை கடத்திச்சென்ற வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பிணியாக்கிய குறித்த சிறுமியின் மச்சானை பொலிஸார் தேடி வலைவிரித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்காவின் கணவரையே தேடிவருவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் குறித்த சிறுமியை வீட்டுக்குதெரியாமல் கடந்த 28 ஆம் திகதி ஹட்டனுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு தனது நண்பரின் வீட்டில் ஜூன் மாதம் 01 ஆம் திகதி வரை தங்கவைத்தே இந்த குற்றத்தைபுரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் குறித்த சிறுமியை அழைத்துவந்த சந்தேகநபர் அவரை வீட்டில் விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார்.வீட்டுக்கு வந்த சிறுமி தனக்கு நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து இதுதொடர்பில் கற்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் சிறுமியும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

குறித்தசிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கர்ப்பமடைந்துள்ளதாகவும் வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே தலைமறைவாகியுள்ள சந்தேநபரான சிறுமியின் அக்காவின் கணவரை தேடி வலைவிரித்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :