13 ஆவது திருத்தததிற்கு ஆதரவளிப்பதில்லையென தீர்மானம்-ஹசனலி



(எம்.பைஷல் இஸ்மாயில்)

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் வீட்டில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் நேற்று முன்தினம் திங்கட்கிழமை 2013.06.10 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வின்போது இன்றைய அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தததிற்கு ஆதரவளிப்பதில்லையென தீர்மானிக்கப்பட்டுள்ளது. என மு.கா. செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் என்.ரீ.ஹசனலி தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டம் சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்றன.

இக்கூட்டத்தில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதில்லை என்ற ஒரே கருத்தை தெரிவித்து ஒரே நிலைப்பாட்டிலேயே காணப்பட்டதாகவும் எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்திற்கு முன் இதுபற்றிய செய்தியினை கடிதம் மூலமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவிப்பதெனவும் தீர்மானிக்கப்படடுள்ளதாகவும் மு.காவின் செயலாளர் என்.ரீ.ஹசனலி எம்.பி. மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :