சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் 134 ஓட்டங்களை பெற்ற குமார் சங்கக்கார,


சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான நேற்றைய போட்டி கிரிக்கெட் வாழ்நாளில் தனது சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று என இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியில் 134 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்ற குமார் சங்கக்கார, போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

இது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாக போட்டியின் பின்னர் அவர் கூறியுள்ளதாக இங்கிலாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், நேற்றைய போட்டியில் மஹேல ஜயவர்தன மற்றும் நுவன் குலசேகர ஆகியோர் வெளிப்படுத்திய திறமை குறித்தும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நிர்ணயித்த 293 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48வது ஓவரில் வெற்றியிலக்கைக் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :