13 வயது மாணவி 26வயது இளைஞன் காதல்,எச்சரித்த பெற்றார் தீக்குளித்த காதலர்கள்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வி.ஆர்.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். பேல்பூரி கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஐஸ்வர்யா (13). அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

லோகநாதன் கடையில் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் (26) வேலை பார்த்து வந்தார். கடைக்கு ஐஸ்வர்யா அடிக்கடி வருவார். அதேபோல் பொருட்களை எடுத்துவர மோகனும் லோகநாதன் வீட்டுக்கு அடிக்கடி செல்வார். அப்போது மோகனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.

கடந்த 2 மாதத்துக்கு முன்பு மோகனுடன் ஐஸ்வர்யா வீட்டை விட்டு ஓடினார். அவர்களை லோகநாதன் தேடி கண்டுபிடித்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு மோகனை வேலையில் இருந்து லோகநாதன் நீக்கி விட்டார். அதன்பிறகும் மோகன், ஐஸ்வர்யா ரகசியமாக சந்தித்து பழகி வந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஐஸ்வர்யா மீண்டும் காதலனுடன் வீட்டை விட்டு ஓடினார். இதுகுறித்து லோகநாதன் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். ‘தனது மகளை மோகன் கடத்தி சென்று விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகாரில் கூறியிருந்தார்.

போலீசார் காதல் ஜோடியை தேடி வந்தனர். இதை அறிந்த மோகன் ஐஸ்வர்யாவை ரகசியமாக அவரது வீட்டில் விட்டுவிட்டு தலைமறைவானார். ஐஸ்வர்யா மீண்டு வந்ததில் லோகநாதன் மகிழ்ச்சி அடைந்தார். ஐஸ்வர்யாவிடம் விசாரித்தபோது அவரை மோகன் கடத்தி சென்றது உறுதியானது.

தனது மகள் கிடைத்துவிட்டதை தெரிவிக்கவும் அவளை கடத்தி சென்ற மோகனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க கோரியும் புகார் செய்ய லோகநாதன் இன்று காலை 8 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் மனைவி மகாராணி, மகன் அஜீத் மற்றும் மகள் ஐஸ்வர்யா ஆகியோரும் சென்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் பைபாஸ் சாலையில் அரசு ஆஸ்பத்திரி அருகே வந்தபோது மறைந்து நின்ற மோகன் திடீர் என ஐஸ்வர்யாவை வழிமறித்தார். அவரது கையில் பெட்ரோல் கேன் இருந்தது. ஐஸ்வர்யாவை பார்த்து ‘போலீஸ் நிலையம் செல்லாதே என்னுடன் வந்துவிடு இல்லையேல் இங்கேயே தீக்குளித்து விடுவேன்’ என்று மிரட்டினார்.

ஐஸ்வர்யா செய்வதறியாமல் திகைத்து நின்றார். அப்போது மோகன் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். உடலில் பற்றி எரியும் தீயுடன் காதலி ஐஸ்வர்யாவை கட்டிப்பிடித்தார். இதில் ஐஸ்வர்யா உடலிலும் தீப்பிடித்தது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அவரது பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். தங்கள் கண் எதிரே மகள் தீயில் சிக்கி துடிப்பதை கண்டு அலறினர். ரோட்டில் வந்தவர்களும் இந்த காட்சியை கண்டு பதறினர். பின்னர் இருவர் மீதும் மண்ணை அள்ளி வீசியும், துணியால் போர்த்தியும் தீயை அனைத்தனர்.

படுகாயம் அடைந்த 2 பேரையும் ஸ்ரீபெரும்புதூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதால் 2 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. கவலைக்கிடமான நிலையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :