கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து கண்டன நடவடிக்கை.


ல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லாவின் வீட்டின் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலைக் கண்டித்து மாநகர சபை உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து கண்டன நடவடிக்கையில் ஈடுபட்டனர். 


கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

இதில் கடந்த 2013.06.10ஆம் திகதி கல்முனை மாநகரசபையின் ஆளும் தரப்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிசார்பான உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லாவின் வீட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலை கண்டித்தும், அதற்குக் காரணமானவர்களை கைது செய்யக்கோரியும் எதிர்காலத்தில் அங்கத்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் உறுப்பினர்கள் அனைவரும் கறுப்புப் பட்டி அணிந்து வருகை தந்திருந்தனர்.

அத்துடன் கல்முனை மாநகர பிரதி முதல்வரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பரினால் மேற்படி கோரிக்கைகள் அடங்கிய பிரேரணையும் முன்வைக்கப்பட்டு சபையினால் ஏகமானதாக அங்கீகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாநகர முதல்வர் சிரராஸ் மீராஸாஹிப் உட்பட அங்கத்தவர்கள் அனைவரும் கறுப்புப் பட்டி அணிந்து கல்முனை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பாரிடம் குண்டுத்தாக்குதலுடன் சம்மந்தப்பட்டவர்களை உடன் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :