
(எம்.பைஷல் இஸ்மாயில்)
கொழும்பு மாநகர சபையின் 12 நகர பிரதேசங்கள் டெங்கு நோய் பரவும் கடும் ஆபத்துக்குரிய இடங்களாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக நகர பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.
டெங்கு ஆபத்தை தோற்றுவிக்கும் இடங்களாக தெமட்டகொடை, வனாத்தமுள்ள, பொரளை, கொம்பனித்தெரு, மட்டக்குளி, முகத்துவாரம், மகவத்தை, கிருலப்பனை, பாமன்கட, வெள்ளவத்தை, நாரஹேன்பிட்டி, கறுவாக்காடு ஆகிய பகுதிகளே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளன.
நாளாந்தம் 183 டெங்கு நோயாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்ற இதேவேளை கொழும்பு நகரில் மட்டும் 1425 நோயாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இதில் ஏழுபேர் மரணித்துள்ளனர். இதில் பொரளை ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் ஆஸ்பத்திரியில் ஒரு குழந்தை டெங்கு நோயினால் மரணித்துள்ளது.
தேசிய நூதனசாலை, மகாவலி கேந்திர நிலையம், ஜோன் டி சில்வா அரங்கு, அரச அச்சகம் உட்பட 14 அரச நிறுவனங்கள் டெங்கு குடம்பி பரப்பும் இடங்களாக காணப்பட்டதை தொடர்ந்து அந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளன.
கொழும்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோனையில் 20,500 அரச தனியார் நிறுவனங்களும், வீடுகளும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு இதில் 1170 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதடன் 550 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்றும் டாக்டர் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment