குவைட் மன்னருக்கு எதிராகப் பேசிய பெண்ணுக்கு 11 வருட சிறைத்தண்டனை.






























க்கிய அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் ஷேக் ஷபா அல்-அகமது அல்-சபா மன்னர் ஆட்சி நடத்தி வருகின்றார். குவைத்தில் மன்னரை அவமதித்து கருத்துகள் தெரிவித்தால் அது பெரிய குற்றமாக கருதப்படுகிறது.

இந்நிலையில் அல்-அஜ்மி என்ற பெண், மன்னருக்கு எதிராக டுவிட்டர் இணைய தளத்தில் தனது கருத்தை வெளியிட்டு இருந்தார்.

அதில், "மன்னர் ஆட்சியை தூக்கி எறிய மக்கள் முன்வர வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்று திரள வேண்டும்" என கூறியிருந்தார்.

மேலும், இக்கருத்தை தனது செல் போன் மூலமும் பரப்பி வந்ததாக தெரிகிறது. அஜ்மி கைது செய்யப்பட்டார். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு இவருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. அதை தொடர்ந்து அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.

குவைத்தில் இது போன்ற குற்றத்துக்காக நீண்ட நாட்கள் ஜெயிலில் அடைக்கப்பட்ட முதல் பெண் இவர்தான். இதற்கிடையே, இந்த தீர்ப்பு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு 2 பெண்களுக்கு கோர்ட்டு சாதாரண தண்டனை விதித்தது.

பின்னர் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :